தமிழ் ஜோதிட களஞ்சியம்



பூமியின் தோற்றம்

நாம் வசிக்கும் இந்த பூமி சுமார் 450 கோடி வருடங்களுக்கு முன்னர் உருவானதாக நவீன அறிவியல் கூறுகிறது. பிரபஞ்சம் பூமியை தவிர கோடிக்கணக்கான நட்சத்திரங்களையும், வெறு கிரகங்களையும் கொண்டுள்ளது. நம் சூரிய மண்டலம் Milky way கேலக்சியில் உள்ளது. இதில் மட்டும் பத்தாயிரம் கோடி நட்சத்திரங்களுக்கு மேல் உள்ளது. இது போல் கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன. இந்த பிரம்மாண்டமான அமைப்பில் நமது சூரிய குடும்பமும், அதிலுள்ள கிரகங்களும் மிக சிறிய புறக்கணிக்கத்தக்க அளவினதாகும். ஆனால் பல கோடி சூரியன்கள் இருப்பினும் பூமியை தவிர வேறெங்கும் உயிரனம் கண்டறியப்படவில்லை. பூமியில் மட்டுமே வளிமண்டலம், தண்ணீர் போன்ற உயிர் உருவாகி வாழ தேவையான அடிப்படை கட்டமைப்பு உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் இந்த மனித பிறவியும், பூமியில் வாழ கிடைத்த வாய்ப்பும் அரிதிலும் அரிதல்லவா?

அறிவியல் வளராத காலத்திலேயே நமது முனிவர்களும், ஞானிகளும் நவகிரகங்களையும், சனி முதலான கிரகங்களின் இயல்பையும் ஞான திருஷ்டி மூலம் கண்டுபிடித்துவிட்டனர். நமது ஜோதிட சாஸ்திரம் புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி, சூரியன், சந்திரன் ஆகிய ஏழு கிரகங்கள் மற்றும் ராகு, கேது ஆகிய நிழல் கிரகங்களை மட்டுமே முக்கியமாக எடுத்துகொள்கிறது. யுரேனஸ் நெப்டியூன், புளூட்டோ போன்ற தொலை தூர கிரகங்கள் இந்திய ஜோதிடத்தில் இடம்பெறவில்லை.