தமிழ் ஜோதிட களஞ்சியம்இராசி மண்டலம்

ஜாதகத்தில் 12 ராசி கட்டங்கள் இருப்பதை அறிவோம். இது வான மண்டலத்தில் பூமியை சுற்றியுள்ள zodiac எனப்படும் இராசி மண்டலமாகும். 360 பாகை சுற்றளவுள்ள இந்த இராசி மண்டலம் 30 பாகை அளவுள்ள 12 இராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் Aries எனப்படும் மேஷம் 0 பாகையில் ஆரம்பமாகும் முதல் இராசியாகும். Pisces எனப்படும் மீனம் 330 பாகையில் ஆரம்பித்து 360 பாகையில் முடியும் கடைசி இராசியாகும்.

மேற்கண்ட படத்தில் பூமியை சுற்றியுள்ள ராசி மண்டலம் மற்றும் 12 ராசிகளை அறிகிறோம். பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியன் பூமியை சுட்றிவருவதாக தோன்றும். இந்த சுற்று பாதை ecliptic எனப்படுகிறது. இந்த ecliptic ராசி மண்டலத்தின் மையபகுதியில் செல்கிறது. இராசி மண்டலம் இதற்கு மேல் 9 பாகையும் கீழ் 9 பாகையும் வியாபித்துள்ளது. இந்த பகுதிக்குள் தான் புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி முதலான கிரகங்கள் காணபடுகின்றன.

ஜாதகத்தில் எவ்வாறு கிரகங்கள் குறிக்கப்படுகின்றன?

ஒருவர் பிறக்கும்போது ராசி மண்டலத்தில் உள்ள கிரகங்களே கட்டத்தில் குறிக்கபடுகிரது. பூமியிலிருந்து பார்க்கும்போது கிரகங்கள் எந்த ராசியில் உள்ளதோ அதுவே ஜாதகத்தில் கிரகத்தின் நிலையாகும். ஜோதிடப்படி ஒவ்வொரு ராசிக்கும் ஒரு ஆட்சி கிரகம், பாலினம், ஜாதி, குணம், திசை உள்ளது. அவற்றை கீழ்கண்ட அட்டவணையில் காண்போம்.

<
எண்ராசிSignஅதிபதிதிசைகுணம்ஜாதிபாலினம்உடல் பாகம்
1மேஷம்Ariesசெவ்வாய்கிழக்குநெருப்பு, சரம்க்ஷத்ரியஆண்தலை
2ரிஷபம்Taurusவெள்ளிதெற்குமண், ஸ்திரம்வைஷ்யபெண்முகம்
3மிதுனம்Geminiபுதன்மேற்குகாற்று, உபயம்சூத்திரஆண்தோள்
4கடகம்Cancerசந்திரன்வடக்குநீர்,சரம்பிராமணபெண்மார்பு
5>சிம்மம்Leoசூரியன்கிழக்குநெருப்பு,ஸ்திரம்க்ஷத்ரியஆண்இருதயம்,வயிறு
6கன்னிVirgoபுதன்தெற்க்குநிலம்,உபயம்வைஷ்யபெண்அடிவயிறு
7துலாம்Libraவெள்ளிமேற்குகாற்று,சரம்சூத்திரர்ஆண்அடிவயிறு
8விருச்சிகம்Scorpioசெவ்வாய்வடக்குநீர்,ஸ்திரம்பிராமணபெண்பாலுறுப்பு
9தனுசுSagittariusவியாழன் கிழக்குநெருப்பு,உபயஷத்ரியஆண்தொடை
10மகரம்Capricornசனிதெற்குநிலம்,சரம்க்ஷத்ரியபெண்முழங்கால்
11கும்பம்Aquariusசனிமேற்குகாற்று,ஸ்திரம்சூத்திரர்ஆண்கால்கள்
12மீனம்Piscesவியாழன்வடக்குநீர்,உபயம்பிராமணபெண்பாதம்

இதில் குணம் என்னும் காலத்திற்கு கீழ் வரும் சரம், ஸ்திரம், உபயம் முறையே சர ராசி (Movable sign), ஸ்திர ராசி (Fixed sign), உபய ராசி (common sign) ஆகியவற்றை குறிக்கும்.

பூமி தன்னை தானே சுற்றிகொள்வதால் 24 மணி நேரத்தில் ராசி மண்டலத்தை முழுவதும் சுற்றிவிடுகிறது. ஒவ்வொரு ராசியும் கிழக்கே உதயமாகி மேற்கே மறைவதுபோல் தோன்றும். ஒரு ராசி சுமார் 2 மணி நேரம் உதயமாகும். ஜாதகத்தில் லக்னம் என்பது ஒருவர் பிறக்கும்போது கீழ்வானில் (Eastern horizon) உதயமாகும் ராசியாகும். லக்னம் என்பதே முதல் வீடாக ஜாதகத்தில் குறிக்கப்படுகிறது.

ஒருவர் பிறக்கும்போது சந்திரன் இருக்கும் ராசியே ஜன்ம ராசியாகும். சந்திரன் இருக்கும் நட்சத்திரமே ஜன்ம நட்சத்திரமாகும்.