தமிழ் ஜோதிட களஞ்சியம்அயனாம்சம்

ஜோதிடம் என்பது கடினமான கணக்கீடுகளையும் வானவியல் கோட்பாடுகளையும் உள்ளடக்கியது. ஜோதிட அடிப்படையை புரிந்துகொள்ள வானவியல் அடிப்படைகளை ஓரளவு புரிந்துகொள்வது அவசியம். பூமி தன்னை தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சுற்றிவருவதை நாம் அறிவோம். இதை பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியன் பூமியை சுற்றி வருவது போல் தோன்றும். இந்த சூரியனின் வட்ட பதையே ecliptic எனப்படுகிறது. பூமியை சுற்றி கிழக்கு மேற்காக செல்லும் கற்பனை கோடுகளுக்கு அட்ச ரேகை (lattitude) என்று பெயர். இதில் பூமியை வடக்கு தெற்காக இரண்டாக பிரிக்கும் கோடு பூமத்திய (equator) ரேகையாகும். இது 0 பாகை lattitude ல் அமைந்துள்ளது. இதற்கு வடக்கில் அமைந்துள்ள இடங்கள் north lattitude எனப்படும். இது 90 பாகை வரை (வட துருவம் வரை) உள்ளது. தெற்கில் அமைந்துள்ள இடங்கள் south lattitude எனப்படும். இது 90 பாகை வரை தெற்கே உள்ளது. பூமியை சுற்றி வடக்கு தெற்காக மேலும் கீழுமாக செல்லும் கற்பனை கோடுகள் தீர்க்க ரேகை (longitude) எனப்படும். இதில் லண்டனில் உள்ள கிரீன்விச் அருகில் செல்லும் கோடு prime meridian எனப்படும். இது 0 பாகை அளவுள்ளது. இதிலிருந்த கிழக்கே உள்ள பகுதிகள் east longitude எனப்படும்.மேற்கே உள்ள பகுதிகள் west longitude எனப்படும். இந்த அட்ச ரேகை தீர்க்க ரேகை அமைப்பு பூமியில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடையாளம் காண உதவுகிறது. வான மண்டலத்தில் equator ன் நீட்சி (extension) celestial equator எனப்படும். பூமியிலிருந்து நட்சத்திர மண்டலம் வரை இதை கற்பனை செய்து கொள்ள வேண்டும். அது போல் celestial longitude உள்ளது.

zodiac எனப்படும் ராசி மண்டலம் மேஷம் (Aries) முதல் மீனம் (Pisces) வரை 12 ராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பூமி தன் அச்சில் சுமார் 23.5 பாகை சாய்வாக சுற்றி வருகிறது. எனவே ecliptic எனப்படும் சூரியனின் சுற்று பாதை celestial equator க்கு 23.5 பாகையில் சாய்ந்துள்ளது. இந்த ecliptic, celestial equator ஐ சந்திக்கும் இடமே equinox எனப்படும். இது இரண்டு இடங்களில் ஏற்படுகிறது. சூரியன் equoator ஐ தெற்கிலிருந்து வடக்காக கடக்கும்போது ஒருமுறை. இது vernal equinox எனப்படும். இது மார்ச் 21 ல் ஏற்படும். இந்த நாளில் சூரியன் நிலநடுகோட்டிற்கு நேர் மேலே வருகிறது. இந்த நாளில் இரவு பகல் சமமாக இருக்கும். வடக்கிலிருந்து தெற்காக கடக்கும்போது autumnal equinox எனப்படும். இது செப்டம்பர் 22 ல் ஏற்படும். இந்த vernal equinox ஏற்படும் இடமே ராசி மண்டலத்தில் 0 பாகையாகும். இதுவே மேஷ ராசியின் தொடக்கம் ஆகும். பூமி தன் அச்சில் சுழல்வதை அறிவோம். அனால் இந்த அச்சும் குறிப்பிட்ட வேகத்தில் சுழல்கிறது. இந்த அச்சு 72 வருடத்தில் 1 பாகை அளவு நகர்கிறது. அதாவது வருடத்திற்கு 50. 3 விகலை அளவு முன்னோக்கி நகர்கிறது (1/60 பாகை ஒரு கலை, 1/60 கலை ஒரு விகலை ஆகும்). எனவே சுமார் 25800 வருடங்களில் 360 பாகை சுழன்று மீண்டும் பழைய இடத்திற்கு வருகிறது. இந்த மேற்கு நோக்கிய நகர்வு காரணமாக vernal equinox நிகழ்வு முன்கூட்டியே நிகழ்ந்துவிடுகிறது. ஆனால் 0 பாகை மேஷம் வானில் நிலையாக உள்ள நட்சத்திர அடிப்படையில் கணிக்கபடுகிறது. சூரியன் முழு சுழற்சியை முடித்து மிண்டும் குறிப்பிட்ட நட்சத்திரத்தின் அருகில் வருவதே sideral year எனப்படும் நட்சத்திர அடிப்படையிலான வருடமாகும். ஒரு vernal euinox க்கும் அடுத்த vernal equinox க்கும் இடைபட்ட காலம் tropical year எனப்படும். இந்த tropical year, sidereal year ஐ விட 20 நிமிடங்கள் குறைவு. வருடத்திற்கு 20 நிமிடம் என்பது 25800 வருடங்களில் 1 வருடத்தை எட்டும். எனவே இந்த vernal equinox 25800 வருடங்களில் ஒரு முழு சுற்று சுற்றி மீண்டும் 0 பாகை மேஷம் க்கு வந்துவிடுகிறது. இந்த முன்னோக்கிய நகர்வே precession of equinox எனப்படும்.

ayanamsa precession of equinox

அயனாம்சம்

இந்த 50.3 விகலை முன்னோக்கிய நகர்வினால் ஒரிஜினல் மேஷம் வர மேலும் வருடத்திற்கு 50.3 பாகை சூரியன் நகர வேண்டும். கி.பி 293 ல் sideral zodiac மற்றும் tropical zodiac ஒரே இடத்தில் இருந்தன. எனவே கி.பி 293 ல் அயனாம்சம் 0 பாகை. தற்போது கி.பி 2013 ல் அயனாம்சம்: (2013-293)=1720*50.3=86516 விகலை. 86516/60=1441.9333 கலை 1441.9333/60=24.03222 பாகை. இந்திய ஜோதிடத்திற்கும் மேற்கத்திய ஜோதிடத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளில் ஒன்று இந்த அயனாம்சம். மேற்கத்திய ஜோதிடத்தில் அயனாம்சம் இல்லை. அது நகரும் zodiac ஐ பின்பற்றுகிறது. அதாவது எப்போது vernal equinox ஏற்படுகிறதோ அதுதான் 0 பாகை மேஷம். அனால் இந்திய ஜோதிடம் அயனாம்சத்தை கணக்கில் எடுத்துகொண்டு அந்த வித்தியாசத்தை கழிக்கிறது. இந்திய ஜோதிடத்தில் கிரக நிலைகள் Nirayana longitude (அயனம் இல்லாத) எனப்படுகிறது. மேற்கத்திய முறையில் Sayana longitude எனப்படுகிறது.

இந்த அயனாம்ச அளவில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. வெவ்வேறு நிபுணர்கள் கணித்த அயனாம்சத்தில் சிறிது வேறுபாடு உள்ளது. இதில் பெரும்பாலானோர் ஏற்று கொள்வது லகிரி அயனாம்சம் எனப்படும் திருக்கணித முறையாகும். இது அறிவியல்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும்.